இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்... திரும்பி வீட்டிற்கு வந்தப்போ அடித்த ஜாக்பாட் - நாளே நாளில் 12 கோடிக்கு அதிபதியானார்

good news Jackpot 12 crore kerala lottery painter wins happy man
By Nandhini Jan 17, 2022 03:59 AM GMT
Report

கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் 12 கோடி ரூபாய்க்கு அதிபதியான சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் அய்மனானம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சதானந்தன். இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.

நேற்று காலையில் ஒரு லாட்டரி விற்பவரிடமிருந்து கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். சில மணி நேரங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலின் மூலமாக சதானந்தன் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி பரிசு கிடைத்துள்ளது. இத்தகவலை அறிந்த அவர் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதித்தார்.

இது குறித்து சதானந்தன் கூறுகையில், நான் கடந்த 50 வருடங்களாக பெயின்டிங் வேலை பார்த்து வருகிறேன். ஞாற்றுக்கிழமை என்பதால் காலை இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்றேன்.

அப்போது சரி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கலாம் என்று செல்வன் என்னும் லாட்டரி விற்பவரிடம் பரிசு பெற்ற சீட்டை வாங்கினேன். அது தற்போது என்னுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றி இருக்கிறது. என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார். 

இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்... திரும்பி வீட்டிற்கு வந்தப்போ அடித்த ஜாக்பாட் - நாளே நாளில் 12 கோடிக்கு அதிபதியானார் | Jackpot Kerala Lottery Painter Wins 12 Lakhs

இறைச்சி வாங்க கடைக்கு போன மனுஷன்... திரும்பி வீட்டிற்கு வந்தப்போ அடித்த ஜாக்பாட் - நாளே நாளில் 12 கோடிக்கு அதிபதியானார் | Jackpot Kerala Lottery Painter Wins 12 Lakhs