“எனக்கு பதவியே வேணாம்” - வெளியேறினார் ட்விட்டர் சிஇஓ

twitter jackdorsey twitterceoresign
By Petchi Avudaiappan Nov 29, 2021 04:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமூகவலைத்தளப் பட்டியலில் முன்னணி நிறுவனமான ட்விட்டர் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வெறும் 140 எழுந்துகளை கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்ற ட்விட்டரின் அடிப்படை விதி உலகளவில் ஹிட் அடித்தது. 

ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி தான் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் இவர் இருந்து வந்தார். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக ஜாக் டோர்சி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ள பராக் அகர்வால் ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகப் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய அமெரிக்கரான இவர் இந்தியாவில் மும்பை ஐஐடியில் பயின்றவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.