சரியாக செயல்படாததால் தனது சம்பளத்தை தானே நிறுத்திவைத்த ஆட்சியர் - குவியும் பாராட்டு

madhya pradesh jabalpur collector karamvir sharma cuts off salary public praises
By Swetha Subash Dec 29, 2021 08:28 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் தனது சம்பளத்தை தானே நிறுத்திவைத்த கலெக்டரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ் சவுகான் தலைமையிலான பா.ஜ.க அரசின் கீழ் சிறப்பு பிரிவில் பொதுமக்கள் புகார் அளித்தால், அந்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கும், பொதுமக்களின் பிரச்சனைகளை சரி செய்வதற்கும் காலக்கெடு உள்ளது.

இந்தநிலையில், ஜபல்பூர் மாவட்டத்தில் கலெக்டராக செயல்பட்டு வரும் கரம்வீர் சர்மா, தனது மாவட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதேபோல், மாதந்தோறும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில்,பல புகார்கள் மீது 100 நாட்களை கடந்தும் தீர்வு காணப்படாதது ஆய்வில் தெரியவந்தது.

மேலும், சில அதிகாரிகள் ஆய்வு கூட்டத்திற்குக் கூட வரவில்லை என்ற காரணத்தினால் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

ஒரு புகாரையும் கவனிக்காமல் விடக்கூடாது என்று தெரிவித்து வருவாய்த்துறை வழக்குகளில் அலட்சியம் காட்டியதற்காக சில தாசில்தார்களுக்கும்,

பல்வேறு வழக்குகளை கையாள்வதில் மெத்தனமாக செயல்பட்டதற்காக செயல் பொறியாளர் PIU (திட்ட அமலாக்கப் பிரிவு) ஆகியோரின் அகவிலைப்படியை நிறுத்தி வைக்கவும்,

புகார் மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காத பல அதிகாரிகளுக்கு, இந்த மாத சம்பளத்தை நிறுத்தி வைக்கவும், மோசமாக செயல்படும் அதிகாரிகளுக்கு, சம்பளத்துடன், ஆண்டு சம்பள உயர்வையும் நிறுத்தி வைக்க பரிந்துரைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் சரியாக செயல்படாததற்கு தான் காரணம் என்று இந்த மாதத்துக்கான தன் சம்பளத்தையும் நிறுத்தி வைக்கும்படி அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், 100 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அனைத்து புகார்களுக்கும், இம்மாத இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பிக்க, இதைப்பார்த்த பொதுமக்கள் கலெக்டரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், இதுபோன்ற கலெக்டர் நாடு முழுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கரம்வீர் சர்மாவை புகழ்ந்து வருகின்றனர்.