வெற்றி நாயகன் இவரே... - ஜி.பி. முத்துவை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர் - வைரலாகும் டுவிட்...!
வெற்றி நாயகன் இவரே... என்று ஜி.பி. முத்துவை பிரபல இயக்குநர் புகழ்ந்து டுவிட் செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி.முத்து
யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜி.பி.முத்துவிடம் பிக்பாஸ் பேசினார். அவரிடம் ஜி.பி.முத்து, தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனக்கு பணம், புகழை விட தன் மகன்தான் முக்கியம் என்றும், அவன் என்னை ஒவ்வொரு நிமிடமும் தேடுவான். அதனால நான் போயே ஆகணும் என உறுதியாக கூறினார்.
இதனையடுத்து, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வெளியே செல்ல அனுமதிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த சீசனில் ஜிபி முத்துதான் வெற்றியாளர் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜி.பி.முத்து பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு விலகியது ரசிர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பிரபல இயக்குநர் சீனு ராமசாமி டுவிட்
இந்நிலையில் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி, ஜி.பி. முத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
தகுதியான ஒரு போட்டியாளன்,
அதன் வருமானம் வெகுமானம்
யாவற்றையும் பணிவோடு
வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக
புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர்
கேட்டும் கேளாமல்
#bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற தமிழ்மகன்
#GPமுத்து தான்
தீபாவளியின் வெற்றி நாயகன்... என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த டுவிட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் ஜி.பி.முத்து உயர்ந்த மனிதர் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
வெற்றி பெற
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) October 24, 2022
தகுதியான
ஒரு போட்டியாளன்,
அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக
புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன் ?@ikamalhaasan pic.twitter.com/aKDpK8vKQH