பாடமுடியாமல் உள்ளாடையுடன் அழுதுக்கொண்டே ஓடிய சந்திரபாபு... - ஷாக்கான ரசிகர்கள்...!

Tamil Cinema
By Nandhini Mar 03, 2023 05:38 PM GMT
Report

படப்பிடிப்பில் உள்ளாடையுடன் அழுதுக்கொண்டே ஓடிய சந்திரபாபுவை குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சந்திரபாபு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பழம்பெரும் நடிகர் சந்திரபாபு. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நகைச்சுவையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்திரபாபு. சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையான ரசிகர்களை இவர் பெற்றிருந்தார். இவர்கள் இருவரை விட சந்திரபாபு அதிகமாக சம்பளமும் வாங்கியுள்ளார்.

கவலை இல்லாத மனிதன், குமாரராஜா ஆகிய படங்களில் சந்திரபாபு ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைய மீண்டும் நகைச்சுவை வேடங்களுக்கு திரும்பினார் சந்திரபாபு. ஆனால், திரையில் மக்களை மகிழ்வித்த சந்திரபாபுவின் இறுதிக்காலம் மிகவும் சோகமாகவே அமைந்தது.

சந்திரபாபு ஷீலா என்கிற பெண்ணை 1958ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி அவரின் காதலருடன் வாழ வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

கடைசி காலம் வரை சந்திரபாபு தனிமையில் வாழ்ந்து வந்தார். தான் நேசித்த மனைவி தன்னை விட்டு போய்விட்டாரே என்ற வலி அவருக்கு பல வருடங்கள் இருந்து வந்தது.

j-p-chandrababu-indian-actor

பாட முடியாமல் திணறிய சந்திரபாபு

ஒரு தடவை ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் சந்திரபாபு நடித்துக்கொண்டிருந்தார்.

அந்தப் படத்தில் ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’என்ற பாடலை சந்திரபாபு பாடிக்கொண்டிருந்தபோது அவருடைய மனதை பாதித்து விட்டது. பாட முடியாமல் திணறிய சந்திரபாபு, முதல் டேக்கில் பாட முடியாமல் போக கோட்டை கழட்டி வீசி எறிந்துவிட்டாராம். அடுத்த டேக்கிலும் பாட முடியாமல் போக சட்டையை கழற்றி வீசிவிட்டாராம்.

இப்படி பேண்ட், ஷூ என எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விட்டு உள்ளாடையுடன் நின்று கதறி அழுது விட்டாராம் சந்திரபாபு. அங்கிருந்து அப்படியே வெளியே சென்று காரை எடுத்து சென்று விட்டார் சந்திரபாபு. இக்கோலத்தை பார்த்த கண்ணதாசன் பதறி அடித்துக் கொண்டு சந்திரபாபுவை நோக்கி காரை எடுத்துக் கொண்டு பின்னால் போயுள்ளார்.

அப்போது, ஒரு தேவாலயத்தில் காரை நிறுத்திவிட்டு சந்திரபாபு அழுது கொண்டே பிரார்த்தனை செய்திருக்கிறாராம். அவரை சமாதானம் செய்து கண்ணதாசன் அழைத்து வந்தாராம். அதன் பிறகு, ஒரே டேக்கில் அந்த பாடலை பாடி அசத்தினாராம் சந்திரபாபு. இதைப் பார்த்த அங்கிருந்த படக்குழுவினர் உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டனராம். 

தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை வரவழைத்துள்ளது. 

j-p-chandrababu-indian-actor

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்