அம்மாவுக்கு குழந்தைகள் வாரிசுகள் என யாரும் கிடையாது - டிடிவி தினகரன்

Speech T. T. V. Dhinakaran J. Jayalalithaa
By Thahir Nov 06, 2021 09:32 AM GMT
Report

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மறைந்த அம்மா ஜெயலலிதாவுடன் எனது சித்தி சசிகலா மற்றும் எங்கள் குடும்பம் 1984 ஆம் ஆண்டிலிலிருந்து அவர் மறையும் வரை கூடவே இருந்துள்ளோம்.

நாங்கள் அறிந்தவரை அம்மாவுக்கு குழந்தைகள் வாரிசுகள் என யாரும் கிடையாது,அப்படி யாராவது இருந்திருந்தால் அம்மாவே அதனை தைரியமாக வெளிப்படுத்தி இருப்பார் அம்மா யாருக்கும் எதற்கும் பயந்தவர் கிடையாது நாங்கள் அறிந்தவரை அம்மாவுக்கு கழகத்தினர் அனைவரும்தான் அவரது பிள்ளைகள் என்றார்.

மேலும் செய்தியாளர்கள் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நான் அங்கு ஒன்றிரண்டு முறைதான் சென்று வந்துள்ளேன்.அதன் உரிமையாளர் தான் அதனை மீட்பது குறித்து பதிலளிக்க வேண்டும்.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த விவகாரத்தில் விசாரணை சரியான முறையில் சென்றுக் கொண்டிருக்கிறது. உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார்.