இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் இவர் தான் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவ்யில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கிட்டதட்ட 60 நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி என 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் வைல்டு கார்டாகவும் 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜாவுக்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டான்ஸ் மாஸ்டர் அமீர், சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் ஆகியோர் புதிய போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இதனால் வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.
இதில் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, நிரூப், பாவனி, தாமரை என 6 பேர் இந்த வார எவிக்ஷன் நாமினேட் ஆயினர்.6 பேருமே முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்ற குழப்பம் இருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டுள்ளார்.
கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது