விஜய் படமானாலும் "அப்படி'லா" நடிக்கவே முடியாது..!! ஒரே அடியாக மறுத்த இளம் நடிகை..?
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "தளபதி 68" படத்தில் நடித்து வருகின்றார்.
விஜய்
இந்த ஆண்டு வாரிசு, லியோ என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இரண்டு படங்களையும் சேர்த்து விஜய் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 900 கோடி (வாரிசு 300 - லியோ 600) கோடிகளை வசூலித்து விட்டார் என்று கூறப்படும் நிலையில், அவரின் 68-வது படமே கடைசி படமாக கூட அமையலாம் என பலரும் பேசி வருகின்றனர்.
AGS தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி என பலரும் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக வெளிநாடுகளில் நடைபெற்று வருகின்றது.
மறுத்த நடிகை
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை இவானா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவானா தளபதி 68 படத்தில் நடிக்கவில்லையாம் என்றும் அவருக்கு வாய்ப்பு வந்தது உண்மை தான், ஆனால் அது தங்கை ரோல் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இவானாவுக்கு இவ்வாறான கதாபாத்திரத்தில் நடித்து விட்டால் தொடர்ந்து அது போன்ற ரோல்கள் வரும் என்ற காரணத்தால் அதனை வேண்டாம் என கூறிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை.
![கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டு : நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது...!](https://cdn.ibcstack.com/article/7d027d70-283c-4c00-82e6-7e5521610e31/24-66895b5795ffe-sm.webp)
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய குற்றச்சாட்டு : நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது...! IBC Tamil
![கேதுவின் பார்வையால் இம்மாதம் இருந்து பலனை பெறப்போகும் ராசிகள் இவர்கள் தான்! நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/591e8fe0-ff61-4513-8130-2cdd6af1b010/24-6689ad787368e-sm.webp)