பத்மபூஷண் விருது - காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது..! பிரேமலதா கருத்து..!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு இன்று பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பத்மபூஷண்
கடந்த 28-ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு இன்று பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று இந்திய அரசு நாட்டின் 3-வது உயரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்.
இருக்கும் போதே
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர், இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, விஜயகாந்த் இருக்கும் போதே அவருக்கு விருது அளித்திருந்தால் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றிருப்போம் என்று கூறி, இது விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
விஜயகாந்த் குறித்து கடந்த 2- ஆம் தேதி திருச்சி வந்த நாட்டின் பிரதமர் மோடி, சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது/