ஒரு பிஸ்கட்டுக்கு ஒரு லட்சமா..?சென்னையில் அதிர்ச்சியை கிளப்பும் செய்தி

Tamil nadu Chennai India
By Karthick Sep 07, 2023 10:05 AM GMT
Report

சென்னையில் ஒரு பிஸ்கட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ள சம்பவத்தின் தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிஸ்கட்

உலகெங்கிலும் ஒரு டி அல்லது காபியுடன் சேர்த்து பிஸ்கட் உண்ணுவதை பலரும் விரும்புவார்கள். சாக்லேட் முதல் பல சுவைகளில் கிடைக்கப்பெறும் பிஸ்கட் இன்றளவும் மிகவும் முக்கியமான தொழிலாகவே உலகெங்கிலும் இருக்கிறது. பல பிஸ்கட் கம்பெனிக்களும் பல விதமான flavour'களை கொடுத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

itc-biscuit-case-marie-light

அதில் ஒன்று தான் ஒரு பாக்கெட் பிஸ்கட்டில் இவ்வளவு பிஸ்கட் இருக்கும் என்பது. இந்த வியாபார நுணுக்கமே தற்போது பிஸ்கட் கம்பெனி ஒன்றிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு பிஸ்கட் இல்லை

பிஸ்கட் பாக்கெட்டில் விளம்பரம் செய்ததை காட்டிலும் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்த காரணத்தினால், அதன் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ITC கம்பெனியின் பிஸ்கட் கவரின் மீது, 16 பிஸ்கட்கள் உள்ளே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் டெல்லி பாபு பிரித்துப் பார்த்தபோது வெறும் 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்ததுள்ளது.

itc-biscuit-case-marie-light

இதைத்தொடர்ந்து பிஸ்கட் வாங்கப்பட்ட அருகாமையில் உள்ள கடைக்கு சென்று அவர் இது குறித்து விசாரித்தார். தன்னை சமாதானப்படுத்தும் விடை அங்கே கிடைக்காததால் அவர் நேரே ITC நிறுவனத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்திருக்கிறார். ஆனால் அவர்களின் பதிலும் அவரை சமாதானப்படுத்தாத நிலையில், டெல்லி பாபு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

1 லட்சம் இழப்பீடு

அவர் தொடுத்த வழக்கில் ஒரு பிஸ்கட்டால் தனக்கு 75 பைசா இழப்பு ஏற்பட்டதாக புகார் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கில் ITC நிறுவனம் வாதிட்ட போது, பாக்கெட் எடையின் அடிப்படையில் தான் பிஸ்கட் விற்பனை செய்யப்படுகிறது என சுட்டிக்காட்டி, எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல என்றும், தங்கள் நிறுவனத்தின் பாக்கெட் 76 கிராம் எடை கொண்டது என்றும் தெரிவித்தனர்.

ஆனால் நீதிமன்ற விசாரணையில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை வெறும் 74 கிராம் மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு வாதிட்ட நிறுவனம் முன் தயாரிப்பு அடிப்படையில் பேக்கிங் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் 4.5 கிராம் அளவுக்கு எடை வித்தியாசம் இருக்கலாம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், பேக்கிங் செய்யப்பட்ட பிறகு பிஸ்கட்டின் எடை குறையாது என சுட்டிக்காட்டி, மேலும் இந்த வாதங்கள் நிலையற்ற பொருட்களைக் கொண்ட பாக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்து பிஸ்கட் பாக்கெட் கவர்மேல் 16 பிஸ்கட்கள் இருப்பதாக தவறான விளம்பரத்தை ஐடிசி நிறுவனம் வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.

itc-biscuit-case-marie-lightitc-biscuit-case-marie-light

மேலும், வாடிக்கையாளர் டெல்லி பாபுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், எடை குறைவான குறிப்பிட்ட வகை பேக்கிங் பிஸ்கட்டுகளை விற்பனையில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.