இந்தியா-இத்தாலி இணைந்து பணியாற்றுவோம்..மோடிக்கு மெலோனி வாழ்த்து!
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடிக்கு-மெலோனி
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி.
அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-இத்தாலி
"இந்தியா-இத்தாலி ஆகிய இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து ணியாற்றுவோம்" என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. அதேபோல, பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமரும், மொரிஷியஸ் பிரதமரும், இலங்கை அதிபரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது. எனினும், காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளை பெறும் கட்சியால் மற்றுமே ஆட்சி அமைக்க முடியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
Congratulazioni a @narendramodi per la nuova vittoria elettorale e i miei auguri più affettuosi di buon lavoro. Certa che continueremo a lavorare insieme per rafforzare l'amicizia che unisce Italia e India e consolidare la cooperazione sui diversi temi che ci legano, per il… pic.twitter.com/v5XJAqkwOz
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 4, 2024