பொங்கி வழியும் தீப்பிழம்பு - எரிமலை வெடிப்பால் விமான சேவை ரத்து!
எரிமலை வெடிப்பு காரணமாக கேடானியா சென்றுவரும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு
இத்தாலியில் அமைந்துள்ளது மவுண்ட் எட்னா எரிமலை. இந்த மலை வெடித்து தீப்பிழம்பு பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது. அதனால் எழும் சாம்பல் அருகில் இருக்கும் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவி இருக்கிறது.

இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முக்கிய சுற்றுலாத் தலமான கேடானியா சென்று வர இயக்கப்படும் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
மேலும், இத்தாலியின் தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம், அதிகமான எரிமலைக் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு, மவுண்ட் எட்னாவில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது.

3,330 மீட்டர் உயரம் கொண்ட எட்னா எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. 2021ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடிப்பு பல வாரங்கள் நீடித்தது குறிப்பிட்டத்தக்கது.