1 வருஷத்தில் 80 கிலோ உடல் எடை அதிகரிப்பு; காதலியை கொன்ற இளைஞர் - விடுவித்த நீதிமன்றம்!
இளைஞர் உடல் எடை அதிகரித்ததால் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
காதலி கொடூர கொலை
இத்தாலியைச் சேர்ந்தவர் டிமிட்ரி ஃப்ரிகானோ(35). இவர் தனது 25 வயது காதலி எரிகா ப்ரீட்டி என்பவருடன் விடுமுறைக்குச் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே ரொட்டி குறித்து சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர் காதலியை 57 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் சிறைக்கு செல்லவில்லை.
விடுவித்த நீதிமன்றம்
சிறைக்குச் செல்லும் போது டிமிட்ரி உடல் எடை 120 கிலோவாக இருந்தது. சிறைக்குச் சென்ற பிறகு அவரது உடல் எடை 200 கிலோ வரை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவரால் நடக்கவே முடியவில்லை. சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் உதவியுடன் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஓவர் எடை டிமிட்ரியை சிறைக்குப் பொருந்தாதவராக மாற்றுவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்து, வீட்டு சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.