‘போரை நிறுத்தினால் உங்களுடன் ஓர் இரவு இருக்கிறேன்’ - புதினுக்கு கோரிக்கை வைத்த ஆபாசப்பட நடிகை
இரு மாதங்களுக்கும் மேலாக கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டு போர் தொடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.
போரை நிறுத்த பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்களும் ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டும் எந்த பலனும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்தினால் அவருடன் ஓர் இரவைக் கழிக்க தயார் என பிரபல ஆபாசப்பட நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் முன்னாள் ஆபாசப்பட நடிகை சிஸியோலினா, இவர் பல வருடங்களாக ஆபாசப் படங்களில் நடித்து வந்த நிலையில், அதிலிருந்து விலகி இத்தாலி அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் சிஸியோலினா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்தினால், அதற்கு ஈடாக அவருடன் ஒரு இரவை செலவிட தயாராக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு வளைகுடாப் போர் தொடங்கிய போது அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனிடமும் சிஸியோலினா இதே கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.