வெறும் 90 ரூபாய்க்கு வீடு...குடியேறினால் போதும் ரூ.27 லட்சம் கிடைக்கும் - எங்கு தெரியுமா?

Italy World
By Swetha Jul 13, 2024 07:08 AM GMT
Report

 வெறும் 90 ரூபாய்க்கு வீடு கிடைக்கும் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

90 ரூபாய்க்கு வீடு

இத்தாலியில் உள்ள ஒரு மாகாணத்தில் ஒரு அற்புதமான சலுகையை வழங்கப்படுக்கிறது. சொர்க்கம் போன்ற இடத்தில் குடியேற அரசு ரூ.27 லட்சம் தருகிறது. இது தொடர்பாக Euronews வெளியிட்ட அறிக்கையின்படி, இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில்

வெறும் 90 ரூபாய்க்கு வீடு...குடியேறினால் போதும் ரூ.27 லட்சம் கிடைக்கும் - எங்கு தெரியுமா? | Italian Govt Gives Home For 90 Rupee Also 27 Lakhs

குடியேற்றம் மற்றும் மக்கள்தொகை குறைவதால் பிரச்சனையில் உள்ள அரசு ஒரு சூப்பரான சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு ‘ரெசிடென்சி இன் ஹில்ஸ் 2024’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்த மாகாணத்தில் யாராவது வீடு வாங்கினால்,

அவருக்கு €10,000 முதல் €30,000 வரை அதாவது ரூ.9 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை கிடைக்கும். வீடு வழங்கப்படும் இடத்தில் 119 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இத்தாலியின் மிக அழகான சில இடங்களில் டஸ்கன் மலைகளும் ஒன்று.

ஒரு ரூபாயில் ஏழைகளுக்கு சொந்த வீடு - ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்!

ஒரு ரூபாயில் ஏழைகளுக்கு சொந்த வீடு - ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்!

ரூ.27 லட்சம் கிடைக்கும்

இந்த நிலையில், கிராமங்களில் மக்கள் தொகையை அதிகரிக்க நிர்வாகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வெறும் 1 யூரோ அதாவது 90 ரூபாய்க்கு வீடு கிடைக்கும். இருப்பினும், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெறும் 90 ரூபாய்க்கு வீடு...குடியேறினால் போதும் ரூ.27 லட்சம் கிடைக்கும் - எங்கு தெரியுமா? | Italian Govt Gives Home For 90 Rupee Also 27 Lakhs

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர் ஒரு இத்தாலியராக அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருக்க வேண்டும். வெளியூரில் இருந்து வருபவர்கள் 10 ஆண்டுகளுக்கு குடியிருப்பு அனுமதி பெற வேண்டும்.

வீட்டை சீரமைக்க செலவிடப்படும் பணத்தில் 50 சதவீதம் மட்டுமே அரசிடம் இருந்து பெறப்படும். இந்த முழு சலுகையின் நோக்கம் உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிப்பதாகும், ஏனெனில் மக்கள் குடியேறும்போது, ​​வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.