சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் டாக்டர் ஆபாசப் பேச்சு - இத்தாலியில் வெளியான வீடியோவால் பரபரப்பு

sexualharrassment italiandoctor
By Petchi Avudaiappan Dec 03, 2021 12:38 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இத்தாலியில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம்  பாலியல் ரீதியாக சீண்டிய டாக்டர் உண்மை வெளிப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இத்தாலிய மகப்பேறு மருத்துவராக 60 வயதாகும் கியோவானி மினியெல்லோ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் குழந்தை பாக்கியம் இல்லை என்று தன்னிடம் வந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ‘செக்ஸ் வைத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்று கூறி பாலியல் ரீதியாக அவரை சீண்டியுள்ளார்.

அப்பெண் தொலைக்காட்சி ஒன்றில்  மருத்துவரின் பாலியல் சீண்டல்களை தெரிவித்துள்ளார். டாக்டர் கியோவானி சிறு மார்பகங்கள் உடைய பெண்களின் ரசிகன் நான் என கூறி தன் மீது கையை வைத்ததாகவும், பாலியல் ரீதியாக தொற்றிய டிஎன்ஏ வைரஸ் என்று கூறி அந்தப் பெண்ணை போலியாக பயமுறுத்தியதாகவும் கூறியுள்ளார். 

மேலும் குழந்தை பிரச்சனைக்குத் தீர்வு தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதுதான் என்றும் கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட சட்ட ஆலோசனை செய்த பிறகு டாக்டருடனான உரையாடல் அனைத்தையும் ரெக்கார்ட் செய்து பிறகு தொலைக்காட்சிக்குக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து புலன் விசாரணை நடத்திய தொலைக்காட்சி நிர்வாகம் தன் பெண் பத்திரிகையாளரை ‘அண்டர் கவர்’ ஆபரேஷனாக அந்த டாக்டரிடம் அனுப்பியது. அவரும் குழந்தை இல்லை, சிகிச்சை தேவை என்று கூறியுள்ளார்.

டாக்டர் கியோவானியும் உடனே அதே செக்ஸ் ‘சிகிச்சை’யை பரிந்துரை செய்து அந்த பத்திரிக்கையாளரை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அப்போது சக தொலைக்காட்சி நிருபர் உள்ளே புகுந்து அரைநிர்வாண 60 வயது டாக்டரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

ஆனால் தான் ஆய்வுக்காக இதைச் செய்கிறேன். பிறரையும் நான் இப்படிக் காப்பாற்றியிருக்கிறேன் என தனது தவறை கியோமினி நியாபகப்படுத்த ஒருகணம் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். மேலும்  சுமார் 15 பெண்களிடம் இவர் தன் கைவரிசையைக் காட்டியதும் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து கியோவானி மினியெல்லோ தன் வேலையை ராஜினாமா செய்தார்.