கடனை திருப்பி அடைக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்..!

Sucide Online Worker IT LoanApp
By Thahir Mar 27, 2022 12:25 AM GMT
Report

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது அண்ணன்கள் இருவருடன் சேர்ந்து கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இரண்டு ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.ஆனால் அந்த பெண் இரண்டு வருடமாக பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே பாரதிராஜா ஆன்லைன் ஆப் மூலம் ரு.12 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வாங்கி கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

ஆனால் ஆப் நிறுவனத்தில் இருந்து கடன் தொகையை கட்ட சொல்லி தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. காதலிக்கும் பெண்ணும் பேசாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்த பாரதிராஜா கடன் தொகை வசூலிக்கும் நிறுவனம் மிகுந்த டார்ச்சர் செய்த காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பாரதிராஜா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பாராதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.