பிரதமர் மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான் - திருமாவளவன்
பிரதமர் நரேந்திர மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை வேண்டும்
இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற 28 ஆம் தேதி மதுரையிலும், அக்டோபர் 8ஆம் தேதி கோவையிலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் தோழைமை கட்சிகளுடன் சேர்ந்து சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பெரியார் ஆக மாறி வந்தால் நல்லது தான். சனாதான எதிர்பாளியாக பிரதமர் மோடி வந்தால் அவரை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம், சமூகப் புறகணிப்பு என்பது பெரிய கொடுமை.
பள்ளி பிள்ளைகள் மீது சாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.