ரொம்ப பயமாகவும், பதற்றமாகவும் இருந்துச்சு..வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேச்சு

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team
By Thahir Nov 03, 2022 10:03 AM GMT
Report

டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றின் முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின.

டி20 உலக கோப்பை போட்டி 

இப்போட்டியில் அடிலெயிடு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி ரன் குவித்தார் கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதை தொடர்ந்து சூர்ய குமார், விராட் கோலி ஆகியோர் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்களை குவித்தது.

It was very scary. Rohit Sharma speech

இதன் பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி முதல் 7 ஓவர்களில் 66 ரன்களை அதிரடியாக குவித்தது.

அப்போது மழை பெய்ய தொடங்கியதால் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் படி 16 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

பின்னர் 16 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ரொம்ப பயமாக இருந்தது 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, இந்த போட்டியின் போது நான் சற்று அமைதியாக இருந்தேன். அதேவேளையில் பதட்டத்துடனும் இருந்தேன்.

It was very scary. Rohit Sharma speech

இந்த போட்டி எங்களுக்கு முக்கியமான ஒன்று அதனால் அமைதியாக இருந்து எங்களது திட்டங்களை வெளிப்படுத்த விரும்பினோம்.

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகளை கையில் வைத்திருந்ததால் போட்டி எப்படி வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். ஆனால் மழை பெய்து பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பித்தபோது அர்ஷ்தீப் சிங் மீண்டும் எங்களை ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.

எங்களது அணியில் தற்போது பும்ரா இல்லாத வேளையில் அவரது இடத்தை யாராவது ஒருவர் கையில் எடுக்க வேண்டும். அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் அந்த பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 9 மாதங்களாகவே அவர் மிக அற்புதமாக பந்து வீசி வருகிறார். ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் அர்ஷ்தீப் சிங்கே கடைசி ஓவர்களை வீச எங்களது முதல் தேர்வாக இருந்து வருகிறார்.

விராட் கோலி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வேற லெவலில் பேட்டிங் செய்து வருகிறார். அவருடைய பேட்டிங் திறனில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அதே போன்று கே.எல் ராகுலும் இன்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் எப்படிப்பட்ட பிளேயர் அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் அர்ஷ்தீப் சிங்கே கடைசி ஓவர்களை வீச எங்களது முதல் தேர்வாக இருந்து வருகிறார்.

விராட் கோலி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வேற லெவலில் பேட்டிங் செய்து வருகிறார். அவருடைய பேட்டிங் திறனில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அதே போன்று கே.எல் ராகுலும் இன்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் எப்படிப்பட்ட பிளேயர் அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என்றார்