அன்புமணியால் தான் பாமக செல்வாக்கை இழந்தது - காடுவெட்டி மனோஜ்..!

Anbumani Ramadoss PMK
By Thahir May 29, 2022 11:03 PM GMT
Report

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக ஐபிசி தமிழின் மெய்பொருள் நிகழ்ச்சியில் காடுவெட்டி மனோஜ் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர்,கடந்த 24 ஆம் தேதி ஜி.கே.மணிக்கு வெள்ளி விழா நடத்தினார்கள். 25 ஆண்டுகளாக அவர் உழைத்து கட்சிக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்டார் என்று கொண்டாடப்பட்டது.

அன்புமணி தலைவராக்குவதற்கு என்ன தகுதி இருக்கு.அவர் என்ன பண்ணியிருக்கிறார். அன்புமணியை கட்சிக்கு அறிமுகப்படுத்தி கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெல்த் மினிஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அலுவலகத்தின் முன் அறிவிப்பு பலகை வைக்கிறார். இந்த சமூக மக்களோ..என் கட்சி சொந்தகாரங்களோ என் அலுவலம் தேடி வரக்கூடாது என்று பெரிய போர்டு வைத்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமுதாயத்திற்கான கட்சி என்று தான் சொல்வார்கள் என்றார். மேலும் அவரின் முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.