நாங்கள் தேடுபொறி நிறுவனம் மட்டும் தான் - ஐடி சட்டங்களிலிருந்து விலக்களிக்க கூகுள் கோரிக்கை

Google Central government New IT Rules
By Petchi Avudaiappan Jun 02, 2021 11:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் புதியதாக அமல்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது. இதனை ஏற்று நடத்த அந்தந்த நிறுவனங்களுக்கு மே 25 ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது.

நாங்கள் தேடுபொறி நிறுவனம் மட்டும் தான் - ஐடி சட்டங்களிலிருந்து விலக்களிக்க கூகுள் கோரிக்கை | It Rules Not Applicable To Search Engine Google

 இது தொடர்பான வழக்கு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்கள் சமூக வலைதளங்கள் இல்லை என்றும் தேடுபொறி நிறுவனம் என்பதால் எங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. 

இதனிடையே கூகுள் நிறுவனம் தெரிவித்த கருத்து குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.