நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் ரெய்டு; சீ ஷெல்லை விற்றுவிட்டேன் - பரபரப்பு விளக்கம்!
நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி ரெய்டு
நடிகர் ஆர்யா நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். இந்த தொழில்களை தனது தம்பியும், நடிகருமான சத்யா மூலமாக மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் Sea Shell என்ற பெயரில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வந்தன. இந்நிலையில் சென்னையில் உள்ள சீ ஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்யா விளக்கம்
அதன்படி அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி 5 ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சீ ஷெல் ஹோட்டல் தன்னுடையது அல்ல என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பாகவே குன்ஹி மூசா என்பவர் வாங்கிவிட்டதாகவும் ஆர்யா விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து தரமணியில் உள்ள குன்ஹி மூசாவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.