பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரன் இவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடந்து வரும் நிலையில்.
இன்று மூன்றாவது நாளாக இந்த சோதனை தொடர்கிறது. சோதனையில் என்ன சிக்கியது என்பது விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.