திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் ஐ.டி ரெய்டு.. எவ்வளவு தொகை சிக்கியது?

house dmk velu it raid
By Jon Mar 27, 2021 12:28 PM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை ரூபாய் 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எ.வ.வேலுவின் வீடுகள் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்களாக வருமானவரித்துறை சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.