சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
அன்புச்செழியன்
அன்புச்செழியன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையை சேர்ந்த அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
வருமான வரித்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் அன்பு செழியன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் நடித்த திகில் பட விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமானவரித்துறை சோதனை
அந்த வகையில் இன்று காலை 5 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அன்பு செழியன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அன்பு செழியன் ஆண்டவன் கட்டளை, மருது, வெள்ளைக்கார துரை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளதுடன் , பைனான்சியராகவும் சினிமா துறையில் உள்ளார்.