திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்த தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

Madurai
By Thahir Jun 28, 2023 07:38 AM GMT
Report

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்த இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொழுகை நடத்த தடை கோரி மனு 

மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சுவாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விசுவநாதர் கோவிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு என்னும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவிலுக்கு செல்ல கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்க உத்தரவிட கோரி கூறியிருந்தார்.

தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு 

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

It is not forbidden to offer prayers on the mountain

அப்போது மனுதாரர் தரப்பில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை கேட்டு வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என கருத்து தெரிவித்து தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.