ஐ.டி. பெண் ஊழியர் கை, கால்களை அறுத்து எரித்துக்கொலை - முன்னாள் காதலன் வெறிச்செயல்!
ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் கொலை
மதுரையை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் சென்னையில் ஐ.டி.யில் பணிபுரிந்து வந்தார். நேற்று இவரின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதல் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு நந்தினியை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி, நந்தினியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சங்கிலியால் கட்டி, கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளார் வெற்றி.
வாலிபர் கைது
இந்நிலையில் தப்பியோடிய வெற்றியை தாழம்பூர் போலீசார் கைது செய்தனர். நந்தினி காதலிக்க மறுத்து வேறொரு இளைஞரை காதலிப்பதை அறிந்ததால், திட்டம் போட்டு வெற்றி இந்த கொலையைச் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், நந்தினி காதலை கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது வெற்றியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.