ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி மாதம் 60,000 சம்பாதிக்கும் பெண்
ஐடி துறையில் 9 ஆண்டுகள் பணியாற்றிய பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவை சேர்ந்த தொழில்முனைவோர் நெஸ்ரின் மித்லாஜ் பகிர்ந்த வீடியோவின் மூலம் இந்த பெண்ணின் கதை வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கடுமையான மன அழுத்தம் மற்றும் பணி நெருக்கடி காரணமாக ஐடி வேலையை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் சூழலில் இருந்த நேர கட்டுப்பாடு மற்றும் அழுத்தத்தை விட தற்போது ஆட்டோ ஓட்டும் வேலை தனக்கு சுதந்திரமாகவும் மனநிம்மதியாகவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆட்டோ ஓட்டுவதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.60,000 வரை வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வேலை வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுத்துள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.