சொத்து பட்டியல் விவகாரம் : அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு

BJP K. Annamalai
By Irumporai May 12, 2023 05:24 AM GMT
Report

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 சொத்து பட்டியல் விவகாரம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

சொத்து பட்டியல் விவகாரம் : அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு | Issue Tr Balu Defamation Case Against Annamalai

 அவதூறு வழக்கு

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அண்ணாமலையின் கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார்.