வெறும் 8 நிமிடங்களில் முடிந்த இஸ்ரோவின் கனவு - என்ன நடந்தது?

Andhra Pradesh ISRO
By Sumathi Jan 12, 2026 04:07 PM GMT
Report

PSLV C-62 ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.

PSLV C-62 ராக்கெட் 

ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, இன்று காலை 10.18 மணிக்கு 18 செயற்கைக்கோள்களுடன் புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 (PSLV-C62) ராக்கெட் தோல்வியில் முடிந்தது.

வெறும் 8 நிமிடங்களில் முடிந்த இஸ்ரோவின் கனவு - என்ன நடந்தது? | Isros Dream Ended 8 Minutes Pslv C62 Rocket Fail

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 சிறிய செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டிருந்தன. விண்ணில் பாய்ந்த ராக்கெட், சரியாக 8-வது நிமிடத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றது.

இஸ்ரோ கனவு

தொடர் முதற்கட்ட விசாரணையில், ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் (PS3 stage) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரியவந்துள்ளது. 505 கி.மீ தொலைவில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள்கள், உந்துவிசை குறைந்ததன் காரணமாகக் குறிப்பிட்ட உயரத்தை எட்ட முடியாமல் போயின.

IRCTC: இனி 8 மணி நேரத்திற்கு டிக்கெட் புக் செய்ய முடியாது - புதிய சிக்கல்

IRCTC: இனி 8 மணி நேரத்திற்கு டிக்கெட் புக் செய்ய முடியாது - புதிய சிக்கல்

இதனால் ராக்கெட்டில் இருந்த 18 செயற்கைக்கோள்களும் புவி ஈர்ப்பு விசை காரணமாக மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்து அழிந்தன.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டும் இதேபோன்ற தொழில்நுட்பக் கோளாறால் தோல்வியடைந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.