வழிதெரியாமல் ஒரே இடத்தில் தவிக்கும் ரோவர்...இஸ்ரோ வெளியிட்ட வைரல் வீடியோ

India ISRO Chandrayaan-3
By Karthick Aug 31, 2023 10:20 AM GMT
Report

சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் சாதனம் நிலவில் ஆய்வு செய்து வரும் நிலையில், வழித்தடத்தை தேடும் ரோவரின் புது வீடியோ ஒன்றை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3  

நிலவின் தென்துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள தனது இரண்டாவது முயற்சியில் இந்தியா மாபெரும் வெற்றியை பெற்று உலகநாடுகளின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இது வரை நிலவின் தென்துருவத்தில் எந்த ஒரு விண்கலமும் இறங்காத நிலையில், அதனை இந்திய விஞ்ஞானிகள் செய்து காட்டி இருக்கிறார்கள்.

ரோவரின் வீடியோக்கள்  

இந்நிலையில், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட விக்ரம் லாண்டரின் ரோவர் சாதனம் நிலவில் தரையிறங்கி ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. நிலவின் தென்துருவத்தில் இது வரை கண்டறியப்படாத கனிமங்களை கண்டு பிடித்து வரும் ரோவர் சாதனம் குறித்த வீடியோக்களை அவ்வப்போது இஸ்ரோ தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றது.

isro-shares-new-video-of-rovar-in-moon

தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ரோவர் சாதனம் தனது பயணத்தை மேற்கொள்ள நிலவில், சரியான பாதையை தேடி சுத்தும் வீடியோவை லேண்டர் படம்பிடித்துள்ளது. இதனை பகிர்ந்துள்ள இஸ்ரோ, விளையாடும் குழந்தையை வாஞ்சையோடு பார்க்கும் தாய் என பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.