சந்திரயான்-3 வெற்றியை பதிவு செய்த குரலின் சொந்தக்காரர்.... விஞ்ஞானி வளர்மதி காலமானார்

Tamil nadu India ISRO
By Karthick Sep 04, 2023 05:13 AM GMT
Report

இஸ்ரோவின் விஞ்ஞானியான மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்.

இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி 

அரியலூர் மாவட்டத்தில் பிறந்த விஞ்ஞானி வளர்மதி தமிழ்வழியில் பள்ளிப் படிப்பைப் முடித்து பின்னர், பொறியியல் பட்டப்படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.கடந்த 1984-ஆம் ஆண்டு இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பணியில் சேர்ந்தார்.

isro-scientist-valarmathi-has-passed-away

2011ஆம் ஆண்டில் ‘ஜிசாட்’ 12 பணியின் திட்ட இயக்குநர் போன்ற பல பொறுப்புகளையும் வளர்மதி வகித்துள்ளார். 2015இல் அப்துல் கலாம் நினைவாகத் தமிழக அரசு வழங்கத் தொடங்கிய அப்துல் காலம் விருதைப் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கையால் வளர்மதி பெற்றார்.

மறைந்த கம்பீர குரல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான மைல் கல்லாக பார்க்கப்படும் சந்திரயான்-3 விண்கலன் ஏவப்பட்ட நிகழ்வினை கவுன்ட்டவுன் கொடுத்து துவந்து வைத்தது முதல் அதனை வெற்றியையும் தனது கம்பீரமான குரலிலேயே வளர்மதி பதிவு செய்திருந்தார்.

isro-scientist-valarmathi-has-passed-away

இந்நிலையில் அவர் சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். அவரின் மறைவிற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.