இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!
தமிழகத்தை சேர்ந்த சிவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், இஸ்ரோவுக்கு வரும்முன்பு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குநராக பணியாற்றினார்.
சென்னை எம்ஐடியில் 1980 ஆம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும், மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்ற சிவன்.
1982-ல் இஸ்ரோவில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார். அறிவியல் சேவைக்காக இவருக்கு 2014 ஆம் ஆண்டுசென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் பெற்றவர்.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ,ஜன.14ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், 2022 ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.