லேண்டரை விட்டு சற்று தூரமாக, ஜாலியாக வலம் வரும் பிரக்யான் ரோவர் - ISRO வெளியிட்ட புதிய வீடியோ!

India Indian Space Research Organisation ISRO Chandrayaan-3
By Jiyath Aug 26, 2023 01:46 PM GMT
Report

பிரக்யான் ரோவரின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

லேண்டரை விட்டு சற்று தூரமாக, ஜாலியாக வலம் வரும் பிரக்யான் ரோவர் - ISRO வெளியிட்ட புதிய வீடியோ! | Isro Released New Video Of Chandrayaan 3

இதைத் தொடர்ந்து சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

வீடியோ வெளியீடு

தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வை தொடங்கியுள்ளது. அண்மையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறும் அழகிய காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி நிலவில் சற்று தூரமாக வலம் வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிடுவது இந்தியர்களையும், உலக மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.