விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்து ISRO சாதனை - உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா!

India Indian Space Research Organisation ISRO
By Jiyath Jan 05, 2024 07:24 AM GMT
Report

விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. 

இஸ்ரோ 

கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்யும் எக்ஸ்போசாட் (XPoSAT) உள்ளிட்ட 10 சாட்லைட்களை கடந்த ம் தேதி, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது இஸ்ரோ.

விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்து ISRO சாதனை - உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! | Isro New Record By Generating Electricity In Space

இதனையடுத்து பூமியிலிருந்து 650 கி.மீ தொலையவில் XPoSAT- ஐ நிலை நிறுத்திய பின்னர், 350 கி.மீ தாழ்வட்டப்பாதையில், POEM என்ற பகுதியில் 10 சாட்லைட்கள் நிலை நிறுத்தப்பட்டன. அந்த பத்து சாட்லைட்களில் ஒன்று Polymer Electrolyte Membrane Fuel Cell என்று அழைக்கப்படுகிறது.

மின்சார உற்பத்தி 

இதிலிருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்களின் துணைகொண்டு விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனையை படைத்துள்ளது .

விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்து ISRO சாதனை - உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! | Isro New Record By Generating Electricity In Space

சூரிய தகடுகள் இல்லாம மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த தொழிநுட்பம் , வருங்கால விண்வெளி திட்டங்களுக்கும், இந்தியா விண்வெளியில் ஆய்வு மையங்களை அமைக்கும்போதும் உபாயயோகமாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், மின்சாரம் மட்டுமின்றி தூய நீர் மற்றும் வெப்பத்தையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.