முதன்முறையாக 6 டன் எடையுடன் விண்ணில் பாய தயாரானது ஜி.எஸ்.எல்.வி.எம்-3 ராக்கெட் - இஸ்ரோ வெளியிட்ட வீடியோ..!

Viral Video Indian Space Research Organisation
By Nandhini Oct 22, 2022 08:30 AM GMT
Report

ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் விண்ணில் பாய தயாராக இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் வணிகப்பயன்பாட்டுக்காக இந்த ராக்கெட் செயல்படுத்தப்படவுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டுள்ளது.

அதனை வடிவமைக்கும் பணிகளும், செயற்கைக் கோள்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

isro-lvm3-m2-oneweb-nsil-viral-video

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

இந்நிலையில், இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் முதன்முறையாக 6 டன் எடையுடன் விண்ணுக்கும் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.