மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்; திடீரென தள்ளிவைப்பு - என்ன காரணம்?

India ISRO Chandrayaan-3
By Sumathi Oct 28, 2024 12:30 PM GMT
Report

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டம் 

சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்தது. இதனையடுத்து மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரேல் தீவிரமாக நடத்தி வருகிறது.

gaganyaan project

முன்னதாக 2025ல் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்வெணிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2026 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டள்ளதாக இஸ்ரேல் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Gaganyaan: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் - அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

Gaganyaan: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் - அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

இஸ்ரோ தகவல்

மேலும், லூபெக்ஸ் பற்றி பேசிய அவர், "இது மிகவும் கடினமான மிஷனாக இருக்கும். இந்த திட்டத்தில் லேண்டர் இந்தியாவால் வழங்கப்படும், அதே நேரத்தில் ரோவர் ஜப்பானில் இருந்து வரும்.

isro chairman somanath

சந்திரயான்-3ல் இருந்த ரோவர் எடை வெறும் 27 கிலோ மட்டுமே. ஆனால் இந்த திட்டத்தில் 350 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும்.

இது ஒரு விஞ்ஞான கனரக பணியாகும், இது சந்திரனில் மனிதர்களை தரையிறக்கும் திட்டத்திற்கு ஒரு படி நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும் " எனத் தெரிவித்துள்ளார்.