மாலத்தீவுக்கு Bye...இந்தியாவுக்கு Hi - நாட்டுமக்களுக்கு இஸ்ரேல் கொடுத்த முக்கிய அட்வைஸ்!

India Israel Maldives World
By Swetha Jun 04, 2024 12:21 PM GMT
Report

இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்லுமாறு மக்களுக்கு இஸ்ரேல் தூதரகம் கூறியுள்ளது.

மாலத்தீவுக்கு No 

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு தான் மாலத்தீவு. இந்த நாட்டின் அதிபராக முய்சு கடந்தாண்டு பதவியேற்றார். அப்போதிருந்தே பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது.இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து முழுமையாக வெளியேறியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மாலத்தீவுக்கு Bye...இந்தியாவுக்கு Hi - நாட்டுமக்களுக்கு இஸ்ரேல் கொடுத்த முக்கிய அட்வைஸ்! | Isreal Asks Their Citizens To Visit India

தொடர்ந்து, அங்குள்ள அமைச்சர்கள் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.உடனே, மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக தடை விதிக்கும் மாலத்தீவு; கொதிப்பில் இஸ்ரேல் - பரபர பின்னணி!

மொத்தமாக தடை விதிக்கும் மாலத்தீவு; கொதிப்பில் இஸ்ரேல் - பரபர பின்னணி!

இஸ்ரேல்  அட்வைஸ்

இதனையடுத்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய சிலவற்றை பரிந்துரைத்துளது.

மாலத்தீவுக்கு Bye...இந்தியாவுக்கு Hi - நாட்டுமக்களுக்கு இஸ்ரேல் கொடுத்த முக்கிய அட்வைஸ்! | Isreal Asks Their Citizens To Visit India

இந்த பதிவில் லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா மற்றும் கேரளாவில் உள்ள கடற்கரைகளின் படங்கள் இடம்பெற்று உள்ளன. இது குறித்த பதிவில், மாலத்தீவுகள் இனி இஸ்ரேலியர்களை வரவேற்காது என்பதால்,

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்கக்கூடிய,மிகுந்த விருந்தோம்பல் கொண்ட சில அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகளை எங்கள் தூதர்கள் அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.