காசா மீது பயங்கர தாக்குதல் ; ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றம் !

Israel Israel-Hamas War Gaza
By Swetha May 11, 2024 06:50 AM GMT
Report

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.

பயங்கர தாக்குதல்

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததோடு, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர்.

காசா மீது பயங்கர தாக்குதல் ; ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றம் ! | Israels War On Gaza Battles

தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்தார். ஹமாஸ் அமைப்பின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்தது.

7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்.இதனை முடிவுக்கு கொண்டுவர பல உலக நாடுகள் களத்தில் இறங்கியது.ஆனால் எதுவும் சரிவர அமையவில்லை. ஐநா எச்சரிக்கைக்கும், கவலைக்கும் இஸ்ரேல் செவி சாய்த்த பாடும் இல்லை.

ரஃபாவை மட்டும் கைப்பற்ற நினைச்சா.. இஸ்ரேலுக்கு அந்த உதவி கிடைக்காது - பைடன் எச்சரிக்கை!

ரஃபாவை மட்டும் கைப்பற்ற நினைச்சா.. இஸ்ரேலுக்கு அந்த உதவி கிடைக்காது - பைடன் எச்சரிக்கை!

லட்சம் மக்கள் 

அதேபோல் வெளிநாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை நிராகரித்தார்.

காசா மீது பயங்கர தாக்குதல் ; ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றம் ! | Israels War On Gaza Battles

இச்சுழலில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து தனது படைகளை காசாவுக்குள் அனுப்பி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. முன்னதாக ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

அதன்படி, ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காணும் இடமெங்கும் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. எனவே அங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.