இஸ்ரேலில் வெடிகுண்டு தாக்குதல் - 11 பாலஸ்தீனியர்கள் மரணம்... - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Palestine World
By Nandhini Feb 23, 2023 07:50 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இஸ்ரேலிய பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்

பாலஸ்தீனத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நகருக்குள் நேற்று நுழைந்தனர்.

இதனையடுத்து, திடீரென்று அங்கு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, இஸ்ரேலிய ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

சரணடைய மறுத்த பயங்கரவாதிகள் ஒரு வீட்டிற்குள் பதுங்கிக்கொண்டனர். இஸ்ரேலிய இராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகளை இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேலிய பயங்கரவாத நடத்திய இத்தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

israeli-terrorist-bombing-of-gaza-palestine