சொல்லியும் கேட்கல.. விடாப்பிடியாக நிற்கும் இஸ்ரேல் - நெருக்கடியில் பைடன்!
இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தாமல் நீடிப்பது அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் போர்
தொடர்ந்து இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. அதில் இஸ்ரேல் பொதுமக்கள் தஞ்சமடைந்து இருக்கும் இடங்களிலும் குண்டுகளை வீசி வருவதால், பலி எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் காசாவில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு உதவிகளை வழங்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தினர். ஆனால் இஸ்ரேல் இரக்கமின்றி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
பின்னர், ஐ.நா.சபையில் ஜோர்டான் கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம் வெற்றி பெற்ற போதிலும், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
அமெரிக்க அதிபர்
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, ஹமாஸ் குழுவை அழிக்கும் நோக்கத்தில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாகக் கூடாது என்று அறிவுறுத்தியது. ஆனால் அமெரிக்காவின் இந்த அறிவுறுத்தலை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவிக்கும் வரை, தற்காலிக போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் நெதன்யாகு.
இஸ்ரேல் பிரதமரின் இந்த முடிவு, அதிபர் பைடன் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதில் பைடனின் சொந்தக் கட்சி உறுப்பினர்களே ஏற்கவில்லை என்ற கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க அரசிற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்கடி உருவாகியுள்ளது.