இஸ்ரேல் தாக்குதல்: அவசர நிலையினை அறிவித்த பிரதமர்.. காரணம் என்ன?

emergency isrel ataack netanyagu
By Irumporai May 12, 2021 10:44 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. நல்ல வேளையாக அங்கு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் காசா டவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது.

இந்த ஏவுகணைகளை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது.

ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகரின் பிற நகங்களில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அவசரநிலை பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.   

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இந்த தாக்குதல் இணையத்திலும் பேசு பொருளாகியுள்து,