வெச்ச பொறியில் தானே எலியான இஸ்ரேல்..!! சொந்த நாட்டு பிணை கைதிகளையே கொன்ற இஸ்ரேல்!!

Israel Israel-Hamas War
By Karthick Dec 16, 2023 12:11 PM GMT
Karthick

Karthick

in உலகம்
Report

காசாவில் தீவிரவாதிகள் என நினைத்து 3 பிணை கைதிகளை தவறுதலாக கொன்றுவிட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இஸ்ரேல் ஹமாஸ் இடையில் இரண்டு மாத காலமாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பால் பிடித்து வரப்பட்ட 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை தீவிரவாதிகள் என நினைத்து சுட்டுக்கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

israeli-army-killed-3-hostages-escaped-from-hamas

இதற்கு வருத்தம் தெரிவித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ”இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மூன்று பிணை கைதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போரிட்டு வரும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி நடக்காது

இனி இது போல் நடந்து விடக்கூடாது என வீரர்களுக்கு பாடம் கற்று கொடுக்கப்பட்டுள்ளது. சோகமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

israeli-army-killed-3-hostages-escaped-from-hamas

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் " ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என தெரிவித்தார்.இது தாங்க முடியாத சோகம் எனவும் மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் " எனவும் கூறினார்.