ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பை தொடர்ந்து அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல் - வெடிக்கும் பிரச்சினை!
அரபு நாடு ஒன்றிற்கு எதிராக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல்
ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நடத்தி வருகிறது.இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து போர் நடைபெற்று வரும் சூழலில் அரபு நாடு ஒன்றிற்கு எதிராக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை யூதக் குழுவான சபாத் என்ற அமைப்பின் தூதுவரான ஸ்வி கோகன் திடீரென மாயமான நிலையில் சடலமாக்க மீட்கப்பட்டார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில் ஐக்கிய அமீரகம் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது .
அரபு நாடு
இதை யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத சம்பவம் என்று இஸ்ரேல் அரசு குறிப்பிட்டு தனது உளவு அமைப்பான மொசாட் மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையில் கோகன் மாயமானது முதலே அவரது குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்பிலிருந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் ஐக்கிய அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வரும் காலங்களில் இது பெரிய பிரச்சினையாக வெடிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நாட்டு மக்களை அத்தியாவசியமான பயணங்களுக்கு மட்டுமே ஐக்கிய அமீரகம் செல்ல வேண்டும் என எச்சரித்து உள்ளது.