தடுத்து நிறுத்திய அமெரிக்கா; தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு - திணறும் ஹமாஸ்!
ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா மறுப்பு
அக் 7ம் தேதி முதல் பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன. ஆனால் எதற்கும் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.
இஸ்ரேல் முடிவு
இதனையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.
இந்நிலையில், அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போரை தொடர்வோம் என்றும் கூறியுள்ளார்.