இஸ்ரேலில் விளைந்த உலகின் பெரிய ஸ்ட்ராபெர்ரி பழம் - கின்னஸ் சாதனை படைத்தது - ஆச்சரியத் தகவல்
Israel
Strawberry fruit
Guinness-World-Record
இஸ்ரேல்
ஸ்ட்ராபெர்ரி பழம்
கின்னஸ் சாதனை
By Nandhini
இஸ்ரேல் விவசாயி ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விளைவித்த ஸ்ட்ராபெர்ரி பழம் உலகின் அதிக எடைகொண்ட பழம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த ஸ்ட்ராபெர்ரியின் எடை சுமார் 289 கிராமாம். ‘எலன்’ வகை ஸ்ட்ராபெர்ரி பழம் சாதாரண பழங்களை விட ஐந்து மடங்கு எடையுடன் விளைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, ஜப்பானைச் சேர்ந்த விவசாயின் தோட்டத்தில் 250 கிராம் எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழம்தான் உலகின் அதிக எடை கொண்ட பழமாக சாதனை படைத்தது.
தற்போது இஸ்ரேலில் விளைந்த ‘எலன்’ வகை ஸ்ட்ராபெர்ரி பழம், அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
