ஈரான் மீதான தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்பட்டது எப்போது?

Iran-Israel War
By Fathima Mar 07, 2026 06:30 AM GMT
Report

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பேசியுள்ளார் இஸ்ரேல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிடியோர் சார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 25, 26ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டார்.

இரு நாட்களில் அதாவது 28ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்பட்டது எப்போது? | Israel Plans About Attack Iran

இதில் ஈரானில் தலைமை மத குரு கமேனி அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார், தொடர்ந்து அமெரிக்கா தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மோடியின் இஸ்ரேல் பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவை எடுத்ததாக இஸ்ரேல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்றுவரும் ரெய்ஸினா மாநாட்டில் வீடியோ வழியாக கலந்துகொண்டு பேசிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் பிப்.28-ஆம் தேதி அதிகாலையில்தான் முடிவு எடுக்கப்பட்டது என்றும் பிரதமா் மோடி மற்றும் இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு பல்லாண்டுகளாக சிறப்பான உறவுகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதல் குறித்து மோடியிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.