இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் - இந்தியாவின் ஆதரவு யாருக்கு?
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடக்கும் யுத்தம் உலக முழுவதும் பேசு பொருளாக உள்ளது.
தற்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலநாடுகள் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு காண்போம் இந்த தொகுப்பில்.
இஸ்ரேல் இந்தியா உறவு:
செப்டம்பர் 17, 1950 அன்று இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, யூத நிறுவனம் பம்பாயில் குடிப்பெயர்வு அலுவலகத்தை அமைத்தது.
பின்னர் இது வர்த்தக அலுவலகமாகவும் பின்னர் தூதரகமாகவும் மாற்றப்பட்டது. 1992இல் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் விவசாயத்தில் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளிலும் விரிவடைந்துள்ளது.
70 ஆண்டுகளில், இஸ்ரேலுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரை ஜூலை 2017 இல், நரேந்திர மோதி பெற்றார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோடியின் வருகையைப் பெருமைக்குரியது என்று வர்ணித்திருந்தார்.
#BREAKING UN chief 'deeply disturbed' by Israel strike on Gaza media building: statement pic.twitter.com/mfGvghxI8S
— AFP News Agency (@AFP) May 15, 2021
இதற்கு பிறகு இரு நாடுகளும் விண்வெளி, நீர் மேலாண்மை, எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
பாலஸ்தீனம் இந்தியா:
1974 ஆம் ஆண்டில், பாலஸ்தீன விடுதலை அமைப்பை பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் நியாயமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக விளங்கியது .
1988 ஆம் ஆண்டில், பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த வரைவுத் தீர்மானத்தை இந்தியா ஆதரவாக வாக்களித்தது.

பிரிவினை சுவர் கட்ட இஸ்ரேல் எடுத்த முடிவை எதிர்த்து 2003 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொது மன்றத் தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்தது
ஆனால் திரைக்குப் பின்னால், இஸ்ரேலுடன் நல்லுறவையும் காத்து வருகிறது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இஸ்ரேலுடன் நல்லுறவை காத்துவருகிறது.
இந்தியாவின் ஆதரவு யாருக்கு:
இந்தியாவைப் பொருத்தவரை தற்போதைய நிலை ஒரு கயிற்றின் மீது நடப்பது போன்ற நிலைதான்.
இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் சமநிலையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவே இந்தியா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.