சர்வதேச ஊடகங்களின் கட்டிடங்களை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்.. கலவர பூமியான காஸா!

isrel gaza
By Irumporai May 15, 2021 04:14 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை அன்று இருதரப்பினருக்கும் இடையே வெடித்த மோதலில்  200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காஸாவின் மசூதியில் தொடங்கிய  வன்முறையானது தற்போது ஜெருசலேம் வரையிலும் பரவி  உலகம் முழுவதும் பரபப்பை ஏற்படுத்தி வருகிறது.

காஸாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பினரைக் குறி வைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டர் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல்  மற்றும் பாலஸ்தீன மோதல் சர்வதேச அளவில் பேசுபொருளாக உள்ளது என்றே கூறலாம்.

. இரு தரப்பினரும் மோதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகள் பலவும் தொடர்  அழுத்தத்தைக்  கொடுத்து வந்தாலும்  மோதல் இன்றும் முடிவுக்கு வரவில்லை .

பலம் வாய்ந்த இஸ்ரேல் 6 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட காஸா நகரத்தைத் தொடர்ந்து ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது.

இது வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 20-க்கும் மேற்பட்டர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினரின் ஜெருசலேம் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் காஸா மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், காஸாவில் இயங்கி வரும் பிரபல செய்தி நிறுவனங்கள் மீது இஸ்ரேல் ராணுவம்  வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சர்வதேச ஊடகங்களான ,அல் - ஜசீரா மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு காஸாவில் இயங்கி வரும் அஸோஸியேடட் பிரஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் கட்டடங்களைக் குறி வைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் கட்டடங்களிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் மூலமாகச் செய்தி நிறுவனங்களின் அலுவலக கட்டடங்களை ஏவுகணைகள் ஏவி தரைமட்டமாக்கினர்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 11 கட்டடங்கள்  தரைமட்டமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

.இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.செய்தி நிறுவனங்கள் மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குக் பல்வேறு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


{{ஆதாரம்: பிபிசி விகடன் AFP ANI}}