செல்லாது செல்லாது மறுபடியும் மாஸ்க் போடுங்க .. மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய இஸ்ரேல்!
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 மாதமாக கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்தது.
மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால்அங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட்டன. மாஸ்க் விதிமுறைகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
ஏன் சமூக வலைத்தளங்களில் கூட பிறந்தால் இஸ்ரேலில் பிறக்க வேண்டும் என புலம்பி தீர்த்தனர் இணையவாசிகள்.
இந்த நிலையில், கடந்த 4 தினங்களாக இஸ்ரேலில் புதிய பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது.
நேற்று 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மீண்டும் மக்கள் இனி பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களுக்கு சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போதுஇஸ்ரேலில் பரவும் வைரஸ் இந்தியாவில் காணப்படும் டெல்டா மாறுபாடு காரணமாக இருக்கலாம் என அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.